/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழாயடி சண்டையில் காயமடைந்த பெண் சாவு: தாய் - மகள் கைது
/
குழாயடி சண்டையில் காயமடைந்த பெண் சாவு: தாய் - மகள் கைது
குழாயடி சண்டையில் காயமடைந்த பெண் சாவு: தாய் - மகள் கைது
குழாயடி சண்டையில் காயமடைந்த பெண் சாவு: தாய் - மகள் கைது
ADDED : பிப் 22, 2024 11:02 PM

வண்ணாரப்பேட்டை, சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மனைவி முனியம்மாள், 38. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி, 38. இவரது மகள் வள்ளி, 20, அரசு கல்லுாரியில், பி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.
நேற்று முன்தினம் மாலை, சாந்தி, வள்ளி ஆகியோர், தெரு குழாயில் குடிநீர் பிடித்த பிளாஸ்டிக் குடங்களை, முனியம்மாள் வீட்டு வாசலில் வைத்துள்ளனர்.
இதன் காரணமாக, இரு தரப்பிற்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், தாயும், மகளும் சேர்ந்து முனியம்மாளை கீழே தள்ளி, தாக்கியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் சண்டையை விலக்கி விட்டுள்ளனர்.
இரவில் முனியம்மாள் நெஞ்சு வலிப்பதாக, கணவர் வெங்கடேசிடம் கூறியுள்ளார். உடனடியாக, ஆம்புலன்ஸ் மூலம், அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு, பரிசோதித்த மருத்துவர், முனியம்மாள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, சாந்தி, வள்ளி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.