ADDED : பிப் 22, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபாளையம்,:பெரியபாளையம் அருகே, மதுரவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா. இவரது மனைவி ரதிதேவி, 31. நேற்று இவர் கன்னிகைப்பேர் கிராமத்தில் உறவினர் வீட்டு விழாவிற்கு சென்று விட்டு, உறவினர் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
அப்போது கன்னிகைப்பேர் கிராமத்தில் ஒரு திருப்பத்தில் திரும்பும்போது, பின்னால் வந்த அரசு பஸ், தடம் எண்.131எ பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த ரதிதேவி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.