ADDED : ஜூன் 22, 2025 08:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி கந்தசாமி தெருவில் உள்ள இரண்டாவது தானியங்கி கேட் வழியாக, நேற்று காலை 45 வயது பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, ரேணிகுண்டாவில் இருந்து திருத்தணி வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில் மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.