நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியம் வயலுார் ஊராட்சி அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி, 45.
கூலி வேலை செய்து வரும் இவருக்கு நதியா, 35 என்ற மனைவியும் 14-- 12 வயதில் ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுாரில் காயத்ரி என்பவரிடம் எம்ராய்டிங் பணி செய்து வரும் நதியா கடந்த 31ம் தேதி பணிக்கு சென்றவர் பின் வீடு திரும்பவில்லை.
மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து முரளி கொடுத்த புகாரின் பேரில் மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

