/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்ணுக்கு கத்திக்குத்து மர்மநபரால் பரபரப்பு
/
பெண்ணுக்கு கத்திக்குத்து மர்மநபரால் பரபரப்பு
ADDED : ஆக 20, 2025 10:59 PM
போளிவாக்கம்:கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் எஸ்.என்., பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 45. திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ., மாவட்ட செயலர். இவருக்கு, ஜீவிதா, 41, என்ற மனைவியும் ஐந்து வயதில் மகளும் உள்ளனர்.
கணவர் வெளியே சென்ற நிலையில், நேற்று காலை 10:30 மணியளவில் வீட்டின் சமையலறையில் ஜீவிதா உணவருந்திக் கொண்டிருந்தார். இவரது தாய் மற்றொரு அறையில் இருந்துள்ளார்.
வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் சமையலறைக்கு சென்று, ஜீவிதாவின் கழுத்து பகுதியில் குத்தி விட்டு தப்பியோடினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மணவாளநகர் போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், ஜீவிதா அணிந்திருந்த 4 சவரன் நகையை பறிக்க முயற்சி நடந்ததா அல்லது வேறெதும் காரணமா என்ற கோணத்தில் மணவாளநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

