/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிப்பறை வசதி இல்லாமல் பெண்கள் பரிதவிப்பு
/
கழிப்பறை வசதி இல்லாமல் பெண்கள் பரிதவிப்பு
ADDED : ஆக 15, 2025 09:26 PM
பொன்னேரி:மெதுார் பஜார் பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததால், பெண்கள் பரிதவித்து வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த மெதுார் பஜார் பகுதியில் இந்தியன் வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஆரம்ப சுகாதார நிலையம், வி.ஏ.ஓ., அலுவலகம் என, பல்வேறு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
மெதுாரை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், பல்வேறு தேவைகளுக்கு மெதுார் வந்து செல்கின்றனர்.
மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள், மீன் மற்றும் இறால் விற்பனையில் ஈடுபடும் பெண் வியாபாரிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
மெதுார் பஜார் பகுதியில் பொது கழிப்பறை வசதி இல்லாததால், பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். தற்போது மெதுார் பஜார் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது.
அதன் அருகில் பொது கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என, பெண்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.