ADDED : மார் 08, 2024 10:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி டி.1 காவல் நிலையத்தில் நேற்று உலக மகளிர் தினவிழா ஒட்டி, மகளிர் காவலர்களை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் நடந்த விழாவில் டி.எஸ்.பி., விக்னேஷ் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடினார். டி.எஸ்.பி., இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
l திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நேற்று உலக மகளிர் தினவிழா நடந்தது. தளபதி கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.பாலாஜி தலைமை வகித்தார்.
மாணவியருக்கு, கல்லுாரி நிர்வாகம் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது. துணை முதல்வர் பொற்செல்வி நன்றி கூறினார்.

