/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சி.வி.நாயுடு சாலையில் விடுபட்ட பகுதிகளில் மைய தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்
/
சி.வி.நாயுடு சாலையில் விடுபட்ட பகுதிகளில் மைய தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்
சி.வி.நாயுடு சாலையில் விடுபட்ட பகுதிகளில் மைய தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்
சி.வி.நாயுடு சாலையில் விடுபட்ட பகுதிகளில் மைய தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்
ADDED : அக் 14, 2025 12:17 AM

திருவள்ளூர், :திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் விடுபட்ட பகுதிகளில், சாலை மைய தடுப்பு அமைக்கும் பணியில், தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், தாமரைப்பாக்கம் மற்றும் ஆவடி பகுதியில் இருந்து திருப்பதி, திருத்தணி, ஊத்துக்கோட்டை செல்ல, திருவள்ளூர் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், ஆயில் மில் சந்திப்பில் இருந்து திருவள்ளூர் டோல்கேட் வரை, நெடுஞ்சாலை துறையினர், 28 கோடி ரூபாய் மதிப்பில் சாலையை விரிவுபடுத்தினர்.
மேலும், சாலையோர மழைநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை, சாலை நடுவே தடுப்பு அமைத்தனர். அதில், சி.வி.நாயுடு சாலையில், அப்பகுதி மக்கள் கடைகளுக்கு செல்லும் வகையில், சாலை மைய தடுப்பில் இடைவெளி விடப்பட்டது.
மேலும், சில மாதங்களுக்கு முன், சி.வி.நாயுடு சாலையில் உள்ள தனியார் இடத்தில் நடத்தப்பட்ட புத்தக கண்காட்சிக்காக, அந்த இடத்தில் இருந்த சாலை மைய தடுப்பு உடைக்கப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சாலை மைய தடுப்பில் ஏற்படுத்தப்பட்ட வழியில், வாகனங்கள் திடீரென கடக்கும்போது, எதிரில் வரும் பிற வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கி வருகின்றன.
சாலையில் திடீரென வாகனங்கள் கடந்து செல்வதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை துறையினர், சி.வி.நாயுடு சாலையில் விடுபட்ட பகுதிகள் மற்றும் உடைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இடைவெளிகளை தடுப்புச்சுவர் அமைத்து அடைக்கும் பணியில் ஈடு பட்டுள்ளனர்.
இதற்காக, சாலை தடுப்பு கான்கிரீட் அமைக்கும் பணியில், அத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.