/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆழ்துளை கிணறுகளுக்கு கான்கிரீட் சுவர் மோட்டார்களை பாதுகாக்க பணிகள் தீவிரம்
/
ஆழ்துளை கிணறுகளுக்கு கான்கிரீட் சுவர் மோட்டார்களை பாதுகாக்க பணிகள் தீவிரம்
ஆழ்துளை கிணறுகளுக்கு கான்கிரீட் சுவர் மோட்டார்களை பாதுகாக்க பணிகள் தீவிரம்
ஆழ்துளை கிணறுகளுக்கு கான்கிரீட் சுவர் மோட்டார்களை பாதுகாக்க பணிகள் தீவிரம்
ADDED : அக் 14, 2025 12:13 AM

பொன்னேரி, : வெள்ளப்பெருக்கு காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள ஆழ்துளை மோட்டார்கள் தண்ணீரில் மூழ்கி செயலிழப்பதை தடுக்க, கான்கிரீட் சுவர் கட்டி பாதுகாப்பு கவசம் அமைக்கப்படுகிறது.
பொன்னேரி அடுத்த சிறுவாக்கம், வன்னிப்பாக்கம் கிராமங்களில் கொசஸ்தலை ஆற்றில், அனுப்பம்பட்டு மற்றும் அத்திப்பட்டு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக, 47 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இங்கிருந்து, தினமும் 103 கிராமங்களுக்கு, 23 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகமும், இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை அமைத்து, தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீரை கொண்டு செல்கிறது.
தற்போது, 10க்கும் மேற்பட்ட புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆழ்துளை கிணறுகள் ஆற்றின் நடுப்பகுதியில் இருப்பதால், வெள்ளப்பெருக்கு காலங்களில் தண்ணீரில் மூழ்கி விடுகிறது.
அச்சமயங்களில், ஆழ்துளை வழியாக மழைநீர் சென்று, மோட்டார்கள் பழுதடைவதுடன், குழாய்களும் ஆற்றுநீரில் அடித்து செல்லப்படுகின்றன. ஆற்றில் நீர் வற்றும் வரை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
இதை தவிர்ப்பதற்காக, ஆழ்துளை கிணறுகளின் குழாய்களை சுற்றிலும் வட்ட வடிவில், 15 அடி உயரத்திற்கு கான்கிரீட் சுவர் அமைக்கப்படுகிறது. அதன் உள்பகுதியில் மண்ணை கொட்டி மூடி, மேற்பகுதியும், சிமென்ட் கலவையால் தளம் அமைத்து பாதுகாக்கப்படுகிறது.
இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் இந்த பாதுகாப்பு கவசத்தால், மழைநீர், ஆழ்துளை கிணறுகளில் சென்று, மோட்டார்கள் பழுதாவதையும், உடைப்புகள் ஏற்படுவதையும் தடுப்பதாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.