ஓட்டுச்சாவடிகளில் சாய்தளம் அமைக்கும் பணி தீவிரம்
ஓட்டுச்சாவடிகளில் சாய்தளம் அமைக்கும் பணி தீவிரம்
ADDED : மார் 31, 2026 10:05 PM

பள்ளிப்பட்டு: சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓட்டுச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சாய்தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் அமைக்கப்படும் ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை சீரமைக்கும் பணியில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளை கலெக்டர் பிரதாப், கடந்த வாரம் ஆய்வு செய்தார்.
அதில், பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜ்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்படும் ஓட்டுச்சாவடிக்கு புதிய சாய்தளமும், நுழைவாயிலும் ஏற்படுத்த உத்தரவிட்டார். அதன்படி, சாய்தளம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
அதேபோல், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் பணியில் தேர்தல் அலுவலர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
