/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இனி தடையில்லா மின் வினியோகம் புதைவழி கேபிள் பதிப்பு பணி தீவிரம்
/
இனி தடையில்லா மின் வினியோகம் புதைவழி கேபிள் பதிப்பு பணி தீவிரம்
இனி தடையில்லா மின் வினியோகம் புதைவழி கேபிள் பதிப்பு பணி தீவிரம்
இனி தடையில்லா மின் வினியோகம் புதைவழி கேபிள் பதிப்பு பணி தீவிரம்
ADDED : மே 15, 2025 12:09 AM

பொன்னேரி:பொன்னேரியில், 33 கே.வி., துணைமின் நிலையம் அமைந்துள்ளது.
பொன்னேரி நகரம், அனுப்பம்பட்டு, திருவேங்கிடபுரம், பெரும்பேடு, ரெட்டிப்பாளையம், சின்னகாவணம், உப்பளம், இலவம்பேடு என, 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, இங்கிருந்து மின்வினியோகம் நடைபெறுகிறது.
விவசாயம், வணிகம், குடியிருப்புகள் என, ஒரு லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.
இந்த துணைமின் நிலையத்திற்கு, 11கி.மீ., தொலைவில் உள்ள மீஞ்சூர் அடுத்த மேலுார் பகுதியில் இருந்தும், 9 கி.மீ., தொலைவில் உள்ள பஞ்செட்டியில் இருந்தும், 33 கிலோவோல்ட் மின்சாரம் கொண்டு வரப்பட்டு, மின்மாற்றிகள் உதவியுடன், 11 கிலோவோல்ட்டாக மாற்றி அனுப்பப்படுகிறது.
விவசாயம், வணிகம், குடியிருப்புகள் என, ஒரு லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. மேலுார் மற்றும் பஞ்செட்டியில் இருந்து கம்பங்கள் வழியாக, 33 கே.வி., மின்சாரம் கொண்டு வரப்படும்போது, மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
மின்கம்பங்கள் உடைவதும், மின்கம்பிகள் அறுந்து போவதும் தொடர்கிறது. இதனால், பொன்னேரி துணைமின் நிலையத்தில் உள்ள மின் பயனீட்டாளர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
பஞ்செட்டி துணைமின் நிலையத்தில் இருந்து, பொன்னேரி துணைமின் நிலையத்திற்கு வரும் மின்கம்பங்கள் விவசாய நிலங்களில் உள்ளன.
இதனால், மழைக்காலங்களில் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு, பல நாட்களாக மின்வெட்டு நீடிக்கும்.
பொன்னேரி மக்களின் பல்வேறு போராட்டங்களின் பயனாக, தற்போது பஞ்செட்டி - பொன்னேரி துணைமின் நிலையம் இடையே, 9 கி.மீ., தொலைவிற்கு புதைவழியில் மின் கேபிள் பதிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
மண்ணுக்கு அடியில் துளையிடும் பிரத்யேக இயந்திரத்தின் உதவியுடன், 620 சதுர மி.மீ., கொண்ட மூன்று கேபிள்கள் பதிக்கப்படுகின்றன.
மின் கேபிள் பதிக்கும் பணிகள் விரைவில் முடித்து, அவற்றின் வழியாக பஞ்செட்டியில் இருந்து பொன்னேரி துணைமின் நிலையத்திற்கு, 33 கே.வி., மின்சாரம் கொண்டு வரப்படும். இனி மழைக்காலங்களில் பொன்னேரி பகுதியில் மின் தடை ஏற்படாது.
-- அதிகாரிகள்,
மின்வாரியம் பொன்னேரி.