/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேலைவாய்ப்பு முகாமில் 351 பேருக்கு பணி ஆணை
/
வேலைவாய்ப்பு முகாமில் 351 பேருக்கு பணி ஆணை
ADDED : பிப் 03, 2024 11:41 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பாண்டூர் இந்திரா மருத்துவக் கல்லுாரியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழா ஒட்டி, வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நடத்தியது.
திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமை வகித்தார். முகாமில் திருவள்ளூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து பணிஆணைகள் வழங்கினர்.
முகாமில் 134 முன்னணி நிறுவனங்களும் 5 திறன்பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டன. முகாமில் 1871 வேலைநாடுனர்கள் கலந்து கொண்டதில் 263 வேலைநாடுனர்கள் என மொத்தம், 351 பேர் தேர்வு செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் விஜயா உட்பட பலர் பங்கேற்றனர்.