/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்கள பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு பயிற்சி
/
மின்கள பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு பயிற்சி
ADDED : டிச 10, 2025 08:29 AM

திருத்தணி: திருத்தணியில் மின்களப்பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு பயிற்சி அளித்து பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டன.
திருத்தணி கோட்டத்தில், திருத்தணி, கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, கொளத்துார், பொதட்டூர்பேட்டை, பூனிமாங்காடு மற்றும் மாமண்டூர் ஆகிய துணை மின்நிலையங்களில், 200க்கும் மேற்பட்ட மின்களப்பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பணி பாதுகாப்பு குறித்து பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில் திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில், மின்களப்பணியாளர்களின் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு திருத்தணி செயற்பொறியாளர் பொறுப்பு முருகபூபதி தலைமையில் நேற்று நடந்தது. 165 களப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கே.ஜி.கண்டிகை உதவி கோட்ட பொறியாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

