/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காட்டு பகுதியில் தொழிலாளி உடல் மீட்பு
/
காட்டு பகுதியில் தொழிலாளி உடல் மீட்பு
ADDED : ஜன 07, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபாளையம்:பெரியபாளையம் அருகே, மெய்யூர் ஊராட்சி, புதிய காலனியில் வசித்து வந்தவர் ஜெகன்னாதன், 48, தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ளவர்.
கடந்த, 26ம் தேதி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். பின் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வேம்பேடு காட்டில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக தகவல் பரவியது. அங்கு சென்று பார்த்தபோது, அவர் ஜெகன்னாதன் என்பது தெரியவந்தது.
பெரியபாளையம் போலீசார் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.