ADDED : நவ 13, 2024 08:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம், நவ. 14-
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கீழாந்துாரை சேர்ந்தவர் பிச்சாண்டி, 55; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டிலுள்ள பசு மாட்டிடம் பால் கறந்தார்.
அப்போது, பசு எட்டி உதைத்தது. இதில், துாக்கி வீசப்பட்ட பிச்சாண்டி படுகாயமடைந்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார். அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.