/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்தில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
/
பேருந்தில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
ADDED : டிச 09, 2025 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: மாநகர பேருந்தில் சென்ற பூ கட்டும் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருவள்ளூர் அடுத்த பழைய கரிக்கலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி, 39, பூ கட்டும் தொழில் செய்து வரும் இவர் நேற்று முன்தினம் திருவள்ளூர் வந்து விட்டு இரவு 7:30 மணியளவில் தடம் எண் 505 என்ற செங்குன்றம் சென்ற அரசு பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
ஒதிக்காடு அருகே பேருந்து சென்ற போது உமாபதி திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை ஓட்டுநர், நடத்துநர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

