/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
/
20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
ADDED : ஜன 12, 2025 08:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சூர்யகாந்தா குந்தா, 24; கும்மிடிப்பூண்டி அடுத்த, பாத்தப்பாளையம் கிராமத்தில் வசித்தபடி அங்குள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை, 20 அடி உயரத்தில் வேலை செய்த போது, அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. பலத்த காயங்களுடன் மருத்துவமனை கொண்டு செல்லும்போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.