/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயிலில் தவறி விழுந்த தொழிலாளி பலி
/
ரயிலில் தவறி விழுந்த தொழிலாளி பலி
ADDED : அக் 06, 2024 12:40 AM
கும்மிடிப்பூண்டி , சென்னை சென்டரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், கும்மிடிப்பூண்டி - எளாவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பெத்திகுப்பம் பகுதியில், தண்டவாளத்தில் நேற்று காலை, ஆண் ஒருவர் ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்தார்.
கொருக்குப்பேட்டை போலீசார் அங்கு சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், ஆந்திர மாநிலம், குண்டூர் ஜில்லா, செனகுபள்ளி மண்டலம், மேட்ட கவுடா பாளையம் கிராமத்தை சேர்ந்த கட்டூரா சீனிவாசராவ், 53, விவசாயி கூலித்தொழிலாளி என்பது தெரிந்தது.
விவசாய பணிக்காக அடிக்கடி தமிழகம் வந்து செல்வது வழக்கமாக கொண்டிருந்தவர், நேற்று அதிகாலை நெல்லுாரில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தபோது, தவறி விழுந்து இறந்துள்ளார்.