/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிலத்தடி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி பலி
/
நிலத்தடி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி பலி
நிலத்தடி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி பலி
நிலத்தடி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி பலி
ADDED : ஜூலை 30, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பருனா பரதா, 26. கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்டு வரும் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று பணியில் இருந்தபோது, தொட்டிகளுக்கு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். கால் தவறியதில், தொட்டிகளுக்கு கீழ் இருந்த தண்ணீர் சேகரிக்கும் 8 அடி ஆழ 'சம்பு'க்குள் விழுந்தார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து, வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.