/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கட்டடம் இடிக்கும் போது தளம் விழுந்து தொழிலாளி பலி
/
கட்டடம் இடிக்கும் போது தளம் விழுந்து தொழிலாளி பலி
ADDED : ஜன 09, 2025 09:46 PM
புல்லரம்பாக்கம்:திருவள்ளூர் அடுத்த, செங்கழுநீர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், 38; கட்டட தொழிலாளி.
கடந்த 8ம் தேதி, திருவள்ளூர் அடுத்த, பீமன்தோப்பு அருந்ததிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராகவன் என்பவருடைய கட்டடத்தை, செல்வம், தனபால், ஆறுமுகம் ஆகிய 3 பேரும் இடிக்கும் பணி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, செல்வம், பிரேக்கர் மிஷினை கொண்டு அதிகமான பிரஷர் கொடுத்து மேல் தளத்தை இடித்து கொண்டிருந்தார். அப்போது தளமானது இடிந்து செல்வத்தின் தலையின் பின்பக்கத்தில் விழுந்தது.
இதில், படுகாயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து செல்வத்தின் உறவினர் சேகர் என்பவர், நேற்று முன்தினம் அளித்த புகாரையடுத்து, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.