UPDATED : ஆக 20, 2026 10:06 PM
ADDED : ஆக 20, 2026 08:24 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, ஈரத்துணியை இரும்பு கம்பியில் காயப்போடும் போது, மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.
மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஹாங்கீர் அலாம் மோலா, 31. கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்வதற்காக, நேற்று கும்மிடிப்பூண்டி வந்துள்ளார்.
புதுகும்மிடிப்பூண்டி அருகே, ராமச்சாரிகண்டிகை கிராமத்தில், சக தொழிலாளர்கள் வசித்து வரும் வீட்டிற்கு சென்றார். அங்கு, நேற்று காலை குளித்துவிட்டு, ஈரத்துணியை இரும்பு கம்பியில் காயப்போட முற்பட்டார்.
அப்போது, இரும்பு கம்பியில் மின்சாரம் கசிந்திருந்ததால், அவர் மீது மின்சாரம் பாய்ந்து, மயங்கி விழுந்தார். உடன் இருந்த நண்பர்கள் அவரை மீட்டு, கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
