தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : ஜன 20, 2024 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2024 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டம் சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 48. மரம் வெட்டும் தொழில் செய்து வரும் இவர், மனநலம் பாதிக்கப்பட்டவர். 19ம் தேதி மாலை தன் மகன் தமிழரசன், 18 என்பவருடன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தார்.

பின் தனியாக அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலில் ஏறி சென்றவர், ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் இறங்கி கடவுப்பாதையில் நடந்து சென்றார்.

திடீரென அப்பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறினார்.

இதில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தவர் பலியானார்.

திருவள்ளூர் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us