/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொது தீக்குழம்பு தெறித்து தொழிலாளி பலி
/
பொது தீக்குழம்பு தெறித்து தொழிலாளி பலி
ADDED : நவ 17, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அகிலேஷ், 32. கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தப்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை வளாகத்தில் வசித்தபடி, அங்கு பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் தொழிற்சாலையின் கொதிகலன் பகுதியில், பணியில் இருந்தார். அப்போது, இரும்பை உருக்கும் கொதிகலனில் இருந்து தீக்குழம்பு சிதறி, அவர் மீது தெறித்தது.
இதில் பலத்த தீக்காயமடைந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.