ADDED : ஏப் 23, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரேஜேஷ்குமார், 38. கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பன்குப்பம் கிராமத்தில் வசித்தபடி, அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம், கும்மிடிப்பூண்டி சிப்காட் வடக்கு சாலையோரம் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் இயக்கப்பட்ட லாரி ஒன்று, பிரேஜேஷ்குமார் மீது ஏறி இறங்கியது. இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

