ADDED : ஆக 29, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி, முருகூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகாந்த், 28; கூலி தொழிலாளி. இவர், சரியாக வேலைக்கு செல்லாததால், கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை, மீண்டும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜெயகாந்த், மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
