/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் மோதி விபத்து தொழிலாளி பரிதாப பலி
/
பைக் மோதி விபத்து தொழிலாளி பரிதாப பலி
ADDED : நவ 08, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பைக் மோதி தொழிலாளி பலியானார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே, ஏடூர் கிராமத்தில் வசித்தவர் வெங்கடேசன், 50. சைக்கிள் ரிக் ஷா தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, எளாவூரில் இருந்து ஏடூர் நோக்கி சைக்கிள் ரிக் ஷாவில் சென்றார்.
இ.சி.எல்., தொழிற்சாலை எதிரே தேசிய நெடுஞ் சாலை இணைப்பு சாலையில் சென்றபோது, பின்னால் வந்த 'ேஹாண்டா டியோ' பைக் மோதியது. இதில், வெங்கடேஷன் கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தார்.
கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

