/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரிகள் மோதல் தொழிலாளி பரிதாப பலி
/
லாரிகள் மோதல் தொழிலாளி பரிதாப பலி
ADDED : நவ 08, 2025 02:01 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி யில், முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
மதுரை அடுத்த மேலுாரில் இருந்து ஆந்திரா நோக்கி லாரி ஒன்று சென்றது. லாரியை, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ், 64, என்பவர் ஓட்டி சென்றார்.
லாரி கேபினில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமை துாக்கும் தொழிலாளர்கள், ஹரிஷ்பாபு, 33, கிரண், 35, ஆனந்த்பாபு, 30 ஆகியோர் பயணித்தனர்.
நேற்று முன்தினம், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் லாரி சென்றது.
அப்போது முன்னால் சென்ற மற்றொரு லாரியை முந்த முயன்ற போது, இரு லாரிகளும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹரிஷ்பாபு அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார். காயமடைந்த மற்ற மூவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

