தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தொழிலாளி சடலமாக மீட்பு

தொழிலாளி சடலமாக மீட்பு

தொழிலாளி சடலமாக மீட்பு


ADDED : மார் 21, 2025 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2025 11:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர், திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளம் அருகே உள்ள புதிதாக கட்டிய கட்டடம் அருகே, ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று காலை திருவள்ளூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்து.

இதையடுத்து நகர போலீசர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பின், போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சேகர், 55, என்பதும், தனியார் காஸ் கம்பெனியில் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணி செய்ததும் தெரியவந்தது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர், வீட்டிற்கு சரியாக செல்வதில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு செல்லாமல், குடித்து விட்டு நீர்வரத்து கால்வாய் அருகே படுத்து கிடந்தவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us