சுமை துாக்கும் தொழிலாளர்கள் முட்டி போட்டு ஆர்ப்பாட்டம்
சுமை துாக்கும் தொழிலாளர்கள் முட்டி போட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 19, 2026 06:04 AM

அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி நுகர்பொருள் வாணிப கிடங்கு அலுவலகம் முன், சுமை துாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில், 25க்கும் மேற்பட்ட சுமை துாக்கும் தொழிலாளர்கள், நேற்று ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முட்டி போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு பச்சை அட்டையை, 2022ம் ஆண்டு முன் தேதியிட்டு வழங்க வேண்டும்.
கூலி உயர்வு தேதி முடிந்துவிட்டதால், 60 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
