/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செடி அகற்றும் போது பாம்பு ஓட்டம் பிடித்த ஊழியர்கள்
/
செடி அகற்றும் போது பாம்பு ஓட்டம் பிடித்த ஊழியர்கள்
செடி அகற்றும் போது பாம்பு ஓட்டம் பிடித்த ஊழியர்கள்
செடி அகற்றும் போது பாம்பு ஓட்டம் பிடித்த ஊழியர்கள்
ADDED : ஜூலை 07, 2025 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை,
செடிகளை அகற்றும் போது, பாம்பு இருந்ததை கண்ட பேரூராட்சி ஊழியர்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஊத்துக்கோட்டை பேரூராட்சி, அய்யனார் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகே அதிகளவில் செடிகள் வளர்ந்துள்ளன. சில இடங்களில் வளர்ந்துள்ள மரங்களின் கிளைகள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கிறது.
நேற்று முன்தினம் மாலை பேரூராட்சி ஊழியர்கள் செடிகளை அகற்றும் போது, பெரிய பாம்பு ஒன்று இருந்ததை கண்டு, அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.