சம்பளத்துடன் விடுமுறை அளிக்க தொழிலாளர்கள் கோரிக்கை
சம்பளத்துடன் விடுமுறை அளிக்க தொழிலாளர்கள் கோரிக்கை
ADDED : ஏப் 05, 2026 04:48 PM
திருவள்ளூர்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டுமென திருவள்ளூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்ககம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து திருவள்ளூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குனர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் வாக்களிக்க ஏதுவாக திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் தேர்தல் நாளன்று, ஓட்டளிப்பது அவசியம் என்பதை தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும். விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
