ADDED : மார் 12, 2024 09:34 PM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடந்தது.
கூடுதல் கலெக்டர் - வளர்ச்சி, சுகபுத்ரா தலைமை வகித்தார். தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லுாரி அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கண்ணன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் கவுசல்யா, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஷோபனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
