/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உலக சிந்தனை நாள் விழிப்புணர்வு பேரணி
/
உலக சிந்தனை நாள் விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 22, 2024 11:09 PM

திருவள்ளூர், சாரணர் இயக்கத்தின் நிறுவனர் பேடன் பவுல் பிறந்த நாளை முன்னிட்டு, உலக சிந்தனை நாள் விழிப்புணர்வு பேரணி திருவள்ளூரில் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணிக்கு மாவட்ட செயலர் சாம்சங் இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட பயிற்சி ஆணையர் எபிநேசர், மாவட்ட அமைப்பு ஆணையர் முரளி முன்னிலை வகித்தனர்.
திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம் பேரணியை துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சார்ந்த, 1,117 சாரண, சாரணியர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் நகரின் பிரதான வீதிகளில் சென்ற பேரணி, வெங்கடேஸ்வரா மேல்நிலை பள்ளியில் நிறைவடைந்தது.
அங்கு, மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.