/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வண்ணார் மைலார் திருவிழா பொங்கல் வைத்து வழிபாடு
/
வண்ணார் மைலார் திருவிழா பொங்கல் வைத்து வழிபாடு
ADDED : பிப் 10, 2025 02:38 AM

திருத்தணி:வீரபத்ர சுவாமி கோவிலில், நேற்று நடந்த, வண்ணார்குல மைலார் திருவிழாவில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திருத்தணி, சலவைத் தொழிலாளர்களின் குலதெய்வமான, வீரபத்ர சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில் வண்ணார்குல மைலார் திருவிழா வெகு விமர்ச்சையாக நடந்து வருகிறது. அந்த வகையில், நேற்று, மைலார் விழா, சங்க தலைவர் நதியாகுப்பன்ராஜ் தலைமையில் நடந்தது.
காலை 10:30 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட பெண்கள், பொங்கல் கூடைகளை தலையில் சுமந்துவாறு, அனுமந்தாபுரம் வண்ணார் குட்டைக்கு வந்தனர்.
அங்கு, பெண்கள் பொங்கல் வைத்து, மூலவர் வீரபத்ர சுவாமிக்கு படைத்து, தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, சலவை தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் உணவை சாப்பிட்டு, மாலை 5:00 மணிக்கு, தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை சலவை தொழிலாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.