ADDED : மார் 01, 2026 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயல்: மதுரவாயல், அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் பிரீத்தி, 26. கடந்த 26ம் தேதி இரவு, மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்றார்.
அடையாளம் தெரியாத நபர், பிரீத்தியை கீழே தள்ளி, அவரது மொபைல் போனை பறித்து தப்பினார்.
மதுரவாயல் போலீசார் விசாரித்து, வழிப்பறியில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமன், 24, என்பவரை கைது செய்தனர். இவர் மீது, வானகரம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு உள்ளது.

