ADDED : ஏப் 26, 2025 09:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே சின்னஓபுளாபுரம் கிராமத்தில், தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு வாடகை வீட்டில் வசிக்கும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, நபகிஷோர் தட்டோய், 32, என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

