ADDED : பிப் 22, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் அஜித், 22. புழல் அடுத்த காவாங்கரையில் உள்ள பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார். கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக, சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிந்த கவரைப்பேட்டை போலீசார், சிறுமியை மீட்டனர். அஜித்தை கைது செய்து அவர் மீது போக்சோ வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.