/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
/
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
ADDED : ஆக 11, 2025 11:08 PM

ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பத்தில் நெசவாளரை கொலை செய்த நபர், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 54. இவர் கடந்த ஜூன் 10ம் தேதி இரவு வீட்டில் விசைத்தறி நெசவில் ஈடுபட்டிருந்தார்.
நள்ளிரவில், வெளியே வந்த ராஜேந்திரனை அதே பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன், 31, என்பவர் கொலை செய்தார். ஆர்.கே.பேட்டை போலீசார் அரிகிருஷ்ணனை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன.
இந்நிலையில் திருவள்ளூர் எஸ்.பி., விவேகானந்த சுக்லா பரிந்துரையின் படி, கலெக்டர் பிரதாப் நேற்று அரிகிருஷ்ணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார், அரிகிருஷ்ணனை புழல் சிறையில் அடைத்தனர்.

