/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி
/
காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி
ADDED : நவ 07, 2025 12:10 AM
திருத்தணி: மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டியதாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட வாலிபர், திடீரென கண்ணாடியில் மோதி தற்கொலைக்கு முயன்றார்.
திருத்தணி அடுத்த வேலஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சூர்யா, 24. இவர் நேற்று திருத்தணி பகுதியில் பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்ததும், திருத்தணி போலீசார் விரைந்து சென்று, சூர்யாவை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
மதியம், போலீஸ் நிலையத்தில் எழுத்தர் மேஜை மீது போடப்பட்டிருந்த கண்ணாடியின் மீது சூர்யா தலையால் இடித்துக் கொண்டார். இதில் தலையில் காயமடைந்த சூர்யாவை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்து மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இதற்கிடையே சூர்யாவின் தாய் பவுனு என்பவர், 'தன்மகன் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக, திருத்தணி நீதிமன்ற வாசலில், பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின் போலீசார் சூர்யாவிடம் கடிதம் பெற்றுக் கொண்டு மாலையில் வீட்டிற்கு அனுப்பினர்.

