/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழப்பு
/
மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஏப் 26, 2025 09:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த பன்பாக்கம் பகுதியில் உள்ள இணைப்பு சாலையில், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று முன்தினம் மதியம் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்து சுயநினைவு இழந்தார். அருகில் உள்ள மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
கிராம நிர்வாக அலுவலர் ஜோதி பிரகாசம் அளித்த புகாரின்படி கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். இறந்தவரின் வலது கையில், 'மைனா 143' என தெலுங்கில் பச்சை குத்தப்பட்டிருந்தது.

