/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலையில் தவறி விழுந்த வாலிபர் பலி
/
தொழிற்சாலையில் தவறி விழுந்த வாலிபர் பலி
ADDED : ஏப் 28, 2025 11:33 PM
மப்பேடு,   ஒடிசா மாநிலம் பலேஸ்வரர் பகுதியைச் சேர்ந்தவர் சையத் காதர், 25, இவரது தன் உறவினர் ஜெய்ருதீன், 28 என்பவருடன் சக்தி இன்ஜினியரிங் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இருவரும் நமச்சிவாயபுரம் பகுதியில் உள்ள வீல்ஸ் இந்தியா லிமிடெட் தொழிற்சாலையில் கூரை மீது ஷீட் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கூரையில் இருந்து சையத் காதர் திடீரென தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த சையத் காதர்  தண்டலம் சவீதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜெய்ருதீன் அளித்த புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

