/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரி மீது ஸ்கூட்டி மோதி இளைஞர் பலி
/
லாரி மீது ஸ்கூட்டி மோதி இளைஞர் பலி
ADDED : பிப் 02, 2025 08:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம்:பட்டாபிராமைச் சேர்ந்தவர் ரித்தஷ், 21. நசரத்பேட்டையைச் சேர்ந்தவர் திருமலை, 20. இருவரும், நேற்று காலை 7:00 மணிக்கு, ஆந்திர, தடா நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் புறப்பட்டனர்.
வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், செங்குன்றம், காந்தி நகரில், ரித்திஷ் மற்றும் திருமலை சென்ற 'டி.வி.எஸ்., ஜூப்பிட்டர்' ஸ்கூட்டர், நிறுத்தப்பட்டிருந்த லாரியில் மோதியது.
ஸ்கூட்டரை ஓட்டிய ரித்தீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமலை லேசான காயங்களுடன் தப்பினார். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

