ADDED : டிச 22, 2024 08:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:பள்ளிப்பட்டு நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 35. இவர், நேற்று முன்தினம் இரவு, சோளிங்கரில் இருந்து, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வெள்ளாத்துார் ஓடை அருகே வரும் போது, எதிரே திருத்தணியில் இருந்து வேலுார் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தடம் எண்:777, மோகன்ராஜ் மீது மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். ஆர்.கே.பேட்டை போலீசார், மோகன்ராஜின் சடலத்தை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.