ADDED : ஜன 01, 2025 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவரம்:சோழவரம் அடுத்த, புதிய எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாய்குமார், 26. தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடிவிட்டு, 'பஜாஜ் பல்சர்' பைக்கில், காரனோடை - புதிய எருமைவெட்டிப்பாளையம் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவரது கிராமத்தின் அருகே செல்லும்போது திடீரென நிலைதடுமாறி பைக்கில் இருந்து விழுந்தார். இந்த விபத்தில் கிரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

