ADDED : பிப் 12, 2025 09:20 PM
திருத்தணி:எண்ணூர் பகுதியைச் சேர்ந்த ராகுல், விக்னேஷ் மற்றும் கொட்டிவாக்கம் சுதர்சன் ஆகியோர், கடந்த 10ம் தேதி, திருத்தணி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து நடைபயணமாக வந்துக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 11:40 மணிக்கு, சென்னை- - திருப்பதி நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த, விநாயகபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால் வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதியதில் நடந்து சென்ற ராகுல், விக்னேஷ், வாகனத்தில் வந்த திருத்தணி சேர்ந்தவர்கள் பவித்ரன், 25, பானுபிரகாஷ், 24, என, நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள், திருத்தணி மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், பவித்ரன் மற்றும் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று, பவித்ரன் இறந்தார்.
திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.