/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டிராக்டர் - பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
/
டிராக்டர் - பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
ADDED : நவ 19, 2024 07:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அருகே கொல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ், 26. இவர், நேற்று முன்தினம் இரவு பள்ளிப்பட்டு அடுத்த தளவாய்பட்டடை சோதனைச்சாவடி வழியாக 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். உடனே, ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் பரிசோதனையில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.