/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை
/
நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை
ADDED : ஆக 31, 2025 03:22 AM
திருவள்ளூர்:கடம்பத்துார் பகுதியில், நாட்டு வெடிகுண்டு வீசி அடையாளம் தெரியாத வாலிபர் கொலை செய்யப்பட்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஊராட்சி, கசவநல்லாத்துார் வைசாலி நகரில், அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், நேற்று இரவு 9:30 மணிக்கு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல், அவர் மீது திடீரென நாட்டு வெடிகுண்டு வீசியது. வாகனம் தடுமாறி விழுந்த பின், வாலிபர், அங்கிருந்து தப்பி ஓடினார்.
எனினும் மர்ம கும்பல் விரட்டிச்சென்று, அரிவாள் மற்றும் கத்தியால் அவரை வெட்டி கொலை செய்தது.
கடம்பத்துார் போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் வழக்கு பதிந்த போலீசார், கொலை செய்யப்பட்டவர் யார், முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.