/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திடீர் வேகத்தடையால் பைக் விபத்து இளைஞர் பலி
/
திடீர் வேகத்தடையால் பைக் விபத்து இளைஞர் பலி
ADDED : பிப் 16, 2024 12:00 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து வங்கனுார் வழியாக ஜி.சி.எஸ்.கண்டிகை செல்லும் வழியில், தனியார் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த பண்ணை வீட்டிற்கு முன்பாக, தார் சாலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென வேகத்தடை அமைக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத் துறையின் அனுமதி இன்றி, பண்ணை வீட்டார் இந்த வேகத்தடையை அமைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4:30 மணியளவில், சி.ஜி.என்.கண்டிகையை சேர்ந்த ஆறுமுகம் மகன் கேசவன், 24, இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இரவோடு இரவாக திடீரென அமைக்கப்பட்ட வேகத்தடையை எதிர்பாராத கேசவன், வேகத்தடை மீது வாகனத்தை செலுத்திய போது, துாக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த கேசவன், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.