/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கல்லுாரி மாணவரை தாக்கிய வாலிபருக்கு 'குண்டாஸ்'
/
கல்லுாரி மாணவரை தாக்கிய வாலிபருக்கு 'குண்டாஸ்'
ADDED : நவ 09, 2025 04:13 AM

திருவள்ளூர்: கல்லுாரி மாணவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வாலிபரை, ரயில்வே போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவி மகன் துளசிராமன், 19. சென்னை பச்சையப்பன் கல்லுாரி மாணவரான இவர், கடந்த ஜூலை 29ம் தேதி மாலை, கல்லுாரி முடிந்து திருத்தணி ரயில் நிலையம் வந்தார்.
அப்போது, மாநில கல்லுாரி முன்னாள் மாணவரான, திருத்தணியைச் சேர்ந்த மாணவர் நவீன், 22, துளசிராமனை அடித்து, பட்டா கத்தியுடன் மிரட்டினார்.
இதுகுறித்து, அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, கடந்த அக்., 11ம் தேதி, நவீனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
நவீன் மீது ஏற்கனவே அரக்கோணம், எழும்பூர் ரயில்வே காவல் நிலையங்களில், பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதையடுத்து, கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, நவீனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை, புழல் மத்திய சிறையில், அரக்கோணம் ரயில்வே போலீசார் சமர்ப்பித்தனர்.

