/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விசாரணைக்கு வந்த வாலிபர் சாலை விபத்தில் பலி
/
விசாரணைக்கு வந்த வாலிபர் சாலை விபத்தில் பலி
ADDED : ஜன 19, 2025 08:45 PM
திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் மணிவாசகம், 24. தனியார் கம்பெனி ஊழியர்.
இவர் திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வங்கனுார் பகுதியை சேர்ந்த உறவினர் மகளை சில மாதங்களாக காதலித்து வந்தார். அந்த பெண் மறுப்பு தெரிவித்தும் தொடர்ந்து மணிவாசகம் வற்புறுத்தி வந்ததால், பெண் திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் நேற்று முன்தினம் மணிவாசகத்தை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர். மணிவாசகத்திடம் , உறவினர் பெண்ணிடம் தகராறு செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.
பின் மணிவாசகம் போலீஸ் நிலையத்தில் இருந்து தன் ஸ்பெளண்டர் பிளஸ் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார்.
திருத்தணி - பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் எதிரே வேகமாக வந்த தனியார் பள்ளி பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணிவாசகத்தை அருங்கிருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.